வாகை சூடுவோம் ( Vaagai Sooduvom)
குழந்தைகள் உலகம் வண்ணமயமானது; கற்பனைகள் நிறைந்தது. அந்த உலகத்திற்குள் நற்பண்புகளையும், அறிவியலையும் இசையோடு கலந்து எடுத்துச் செல்வது ஒரு கலை. அந்தக் கலையைத் தன் கையில் எடுத்து, “வாகை சூடுவோம்” என்ற இந்த அழகிய பாடல் நூலைப் படைத்துள்ளார் மாநகராட்சி துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. க. சகுந்தலா அவர்கள்.







