முயற்சி வெல்லும் (Muyarchi Vellum)
முயற்சி, கல்வி, நட்பு, சமத்துவம், தன்னம்பிக்கை என ஒவ்வொரு கதையிலும் ஒரு உயர்ந்த வாழ்வியல் தத்துவத்தை மிக எளிமையான நடையில் குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் செதுக்கியுள்ளார். இந்தச் சிறு கதைகள் மாணவர்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்து, அவர்களைச் சிறந்த மனிதர்களாக உருவாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சிறந்ததொரு படைப்பைத் தமிழன்னைக்கு மகுடமாகச் சூட்டியுள்ள நூலாசிரியர் கல்விச்சுடர் க. சகுந்தலா அவர்களின் தமிழ்ப்பணி சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!







